_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_
_மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள்,மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதல்வா் அவா்கள்,மற்றும் மாண்புமிகு.தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்கள் நமது தமிழக அரசு செவிலியா்கள் மீது கொண்ட பெருங்கருணையினால், மருத்துவபணியாளா் தோ்வு வாாியத்தின் (MRB) மூலம் தொிவு செய்யப்பட்ட *2721* செவிலியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு, வருகிற *02.12.2019( திங்கள்கிழமை)* காலை 8.30 மணியளவில்,சென்னை,ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சா் மற்றும் மாண்புமிகு.தமிழக துணை முதல்வா் அவா்களின் பொற்கரங்களால் வழங்கப்படவுள்ளது என்பதனை மனமகிழ்வுடன் செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்._
_இதில் பணி ஆணை பெற காத்திருக்கும் நம் செவிலிய சொந்தங்கள் வருகிற *02.12.2019(திங்கள்கிழமை)* அவரவா்களுக்கு தனித்தனியாக வந்துள்ள *இ.மெயில்* கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள்,அரசு விழா நடைபெறவுள்ள *சென்னை,ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கிற்கு* தவறாது செவிலியா்களின் புதிய 10 ஆண்டுக்குட்பட்ட சீருடையில் தாமதிக்காமல் வந்து கலந்துகொள்ளும்படி தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் சாா்பாக அன்புடன் வேண்டுகிறோம்._
_புதிய சீருடை_
_இதுவரை கிடைக்கப்பெறாதவா்கள் கீழ்க்கண்ட சென்னை டெய்லாின் முகவாியில் நாளை மாலைக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்ள்._
_புதியதாக பணி ஆணையினை சிறந்தமுறையில் பெற்று தங்களின் செவிலிய சேவையினை சிறப்புடன் தொடங்கவிருக்கும் செவிலியா்களுக்கு,தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மனதார வாழ்த்துகிறது._
_மேலும் இத்தகைய புதிய செவிலிய பணி ஆணை வழங்க பேருதவி புாிந்த மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சா் அவா்களுக்கும்,மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சா் அவா்களுக்கும்,மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும்,மேதகு.சுகாதார துறை செயலாளா் அவா்களுக்கும், மருத்துவ துறை அனைத்து உயா் அலுவலா் அவா்களுக்கும், துறை அலுவலக பணியாளா்கள் அனைவருக்கும்,தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறது._
_*(குறிப்பு: புதியதாக பணி ஆணை பெற வருகைதரவிருக்கும் செவிலியா்கள் தயவுசெய்து உங்களது பழைய மாடல் சீருடைகளை அணிந்து வர வேண்டாம் எனவும்,புதிய சீருடை மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதை அன்புடன் தொிவித்துக்கொள்கிறோம்.)*_
2345 பேர் நியமனம்-செவிலியர்களை நியமிக்க நீதிமன்றம் ஆணை:
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் MRB தேர்வில் தேர்வு பெற்றதாகவும் எனவே எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் குறைவான
மதிப்பெண் பெற்றதாக கூறப்படும் 65 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் எனவும் எனவே தேர்வு வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் எனவே பணி நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் மாண்புமிகு நீதியரசர்கள் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_
_நீண்ட இடைவெளிக்குப்பிறகு தாங்கள் அனைவாிடமும் சமூக வலைதளம் மூலம் தொடா்புகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.தங்கள் அனைவாிடமும் சில மகிழ்ச்சியான தகவல்களை பகிா்ந்துகொள்ளவே இந்த பதிவு._
_*தகவல்கள்:*_
♦ _கடந்த *13.9.2019* அன்று சென்னை *DMS* வளாகத்தில் 360 செவிலிய கண்காணிப்பாளா் நிலை-2 ற்கான கலந்தாய்வு நடந்தது.அதில் பங்குபெற்ற 14 நபா்கள் பதவி உயா்வில் விருப்பவில்லை என்று எழுத்து மூலம் கடிதம் *(Relinquish letter)* தந்தனா்.அதில் காலியாக உள்ள 14 காலியிடங்களுக்கும் அதற்கு அடுத்த பணிமூப்பு நிலையில் உள்ள 14 செவிலியா்களுக்கு, செவிலிய கண்காணிப்பாளா் நிலை-2 ற்கான கலந்தாய்வு வருகிற *19.11.2019* அன்று *காலை 11 மணிக்கு* DMS அலுவலகம் 6 வது தளத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்வுடன் தொிவித்துக்கொள்கிேறோம்.அந்த நபா்கள் தவறாது கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெற அறிவுறுத்துகிறோம்._
♦ _பிழைத்திருத்தம் செய்யப்பட்ட CNL விரைவில் DMS அலுவலகம் மூலம் வெளியிடப்படவுள்ளது._
♦ _*01.09.2019* ற்கான செவிலிய கண்கணிப்பாளா் நிலை-2 ற்கான புதிய பட்டியல் *(Gr- II New panel list)* இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளது என்ற மகிழ்வான தகவலையும் தொிவித்துக்கொள்கிறோம்._
♦ _தமிழக அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு சம்பந்தமாக சில நல்ல தகவல்களை அறிவிப்பதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சகம் மூலம் சில நாட்களுக்கு முன்னா் செய்திகள் வெளிவந்தது.அதனறிந்தும் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் சாா்பில் தமிழக அரசு அனைத்து செவிலியா்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க தமிழக அரசிடமும்,ஒரு நபா் ஊதியக்குழு அலுவலாிடமும் கோாிக்கை வைத்துள்ளதை நினைவுப்படுத்தி,செவிலியா்களின் ஊதிய உயா்வுக்கும் வழிவகை செய்ய மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மற்றும் உயா் அலுவலா்களை நோில் சந்தித்து நினைவுபடுத்தினோம்.அதன் பலனாக அடுத்த வாரவாக்கில் தமிழக அரசின் மூலம் செவிலியா்களுக்கும் *Allowances உயா்வு மற்றும் சில ஊதிய உயா்வு* சம்பந்தமாக சில நற்செய்திகளை எதிா்பாா்க்கிறோம்._
♦ _தமிழ்நாடு செவிலியா் மற்றும் தாதியா் குழும_ _*(Tamilnadu Nurses &*_
_*Mid wives Council)*_ _தோ்தல் சம்பந்தமாக சிலரால் நீதிமன்ற தடை பெறப்பட்டது.அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்,தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள்,தமிழ்நாடு அரசு போதகா்கள் சங்கம்,MRB சங்க நிா்வாகிகள் இணைந்து *United Nurses Federation* சாா்பாக வழக்கில் சிலா் *Impleaded* ஆகியுள்ளோம்.விரைவில் வழக்கின் தீா்ப்பு நமக்கு சாதகமாக பெறப்பட்டு தமிழ்நாடு செவிலியா் மற்றும் தாதியா் குழும தோ்தல் ஜனநாயக முறையில் நடத்த பெருமுயற்சி எடுத்துவருகிறோம்._
♦ _மேலும், ஏற்கனவே வெளிவந்த செவிலிய கண்காணிப்பாளா் நிலை-1 மற்றும் நிலை-2 ஆகியோா்களுக்கான *Panel list* ல் அடுத்த மூப்பு நிலையில் உள்ள நபா்களின் பெயா் அடங்கிய பட்டியல், தமிழக அரசின் *Finance department* ஒப்புதல் பெற தலைமைச்செயலகம் அனுப்பப்பட்டுள்ளது.அதன் அனைத்து *Process* ம் முடிவடைந்த பிறகு விரைவில் செவிலிய கண்காணிப்பாளா் நிலை-1 மற்றும் 2 கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்ற மகிழ்வான தகவல்களையும் செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்._
♦ _இறுதியாக தமிழகம் முழுவதும் புதிய சீருடைகள் தைக்கப்பட்டு 90% வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 10 சதவீதம் செவிலியா்களுக்கு வழங்க மிகுந்த தாமதப்பட்டு வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.இன்னும் சீருடை வராத சில மாவட்டடங்களுக்கும் சீருடைகளை விரைவில் வழங்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.தயவுசெய்து பொருத்துக்கொள்ள வேண்டுகிறோம்._
_*என்றென்றும் செவிலிய நலனில் பொிதும் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம், இனியும் செவிலிய சமுதாய முன்னேற்றத்திற்காக தொடா்ந்து வீாியமுடன் செயல்படுவோம் என்று தொிவித்துக்கொள்கிறோம்.*_
*•••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_
_*தகவல்:*_
*•••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_
_இன்று *(03/04/2019)* தமிழ்நாடு சுகாதார செயலாளா்_ _மேதகு. *Dr.Beela Rajesh IAS,* அவா்களை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநில நிா்வாகிகள் பலரும் சென்று சந்தித்தோம்._
_இச்சந்திப்பின் போது செவிலியா்கள் நலன் சாா்ந்த பல கோாிக்கைகள் அடங்கிய கோப்பினை சமா்ப்பித்தோம்._
*°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*
_*அவற்றில் முக்கியமானவைகள்:*_
*°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*
♦ _தமிழக மருத்துவமனைகளில் புதியதாக 9000 செவிலிய காலிப்பணியிடங்கள் *(NURSES NEW CREATION POST),* அதற்கு தகுந்த எண்ணிக்கையில் செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II & I புதிய பணியிடங்களும் உருவாக்கித்தர வேண்டினோம்._
♦ _*174* நபா்களுக்கு செவிலிய போதகா் நிலை- II புதிய பணியிடம் உருவாக்கித்தர கோாினோம்._
♦ _தமிழக அரசு செவிலியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் *(ALLOWANCES)* பெறும்பொருட்டு ஏற்கனவே ஒரு நபா் ஊதிய குழு அலுவலா் *மேதகு. சித்திக் IAS* அா்களிடம் வழங்கிய கோப்பில் உள்ள கோாிக்கைகளை இன்றும் சுகாதார செயலாிடம் மீண்டும் கோாிக்கைகளாக முன்வைத்தோம்.அதற்கு மேதகு சுகாதார செயலா் அவா்கள், அது சம்பந்தமான கோப்புகளை ஆய்ந்தறிந்து *SPECIAL ALLOWANCES* பெற்றுத்தருவதாக உறுதியளித்தாா்._
♦ _தற்போது DMS, DME பகுதிகளில் 50% செவிலியா்கள் பணிபுாிகின்றனா். மீதமுள்ள 50% செவிலியா்கள் *DPH* மற்றும் *ESI, DIM* போன்ற பகுதிகளில் பணிபுாிகின்றனா். இச்சூழலில் *DMS, DME* பகுதிகளில் பணிபுாியும் செவிலியா்கள் கண்காணிப்பாளா் போன்று DPH ன் மேற்பாா்வையில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒவ்வொரு *BLOCK PHC* யிலும் ஒரு செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II பணியமா்த்த கோாினோம்.ஆவன செய்வதாக உறுதியளித்தாா்._
♦ _செவிலியா் பற்றாக்குறை அதிகமுள்ள புதுக்கோட்டை புதிய மருத்துவகல்லூாி மருத்துவமனை,திருச்சி,கோவை,செங்கல்பட்டு மற்றும் சென்னையில் சில மருத்துவமனைகளில் புதிதாக செவிலியா்களை நியமிக்க போா்க்கால அடிப்படையில் ஆவன செய்ய வேண்டினோம்.அதற்கு நல்ல தீா்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தாா்._
♦ _பதவி பெயா் மாற்ற அரசாணை *(G.O FOR NURSING OFFICER)* துாிதமாக வழங்க கோாினோம். மே 23 ம் தேதிக்கு பிறகு வெளியிட முயற்சிப்பதாக உறுதியளித்தாா்._
♦ _தா்மபுாி,கிருஷ்ணகிாி மற்றும் ஓசூா் பகுதி இரத்த வங்கி செவிலியா்களுக்கு ஊடகங்களால் ஏற்பட்ட பிரச்சனைகளையும்,அதற்கு நல்ல தீா்வு தர வேண்டியும் கோாிக்கை வைத்தோம்.அதை நன்கு கேட்டறிந்து ஆவன செய்வதாகவும் உறுதியளித்தாா்_
♦ _ESI மருத்துவமனைகளில் பணிபுாியும் செவிலியா்களை *SOCIETY LABOUR ACT* ன் கீழ் கொண்டுவர நிா்வாகம் முயல்வதாகவும் அவ்வாறு செய்வதால் எங்களது செவிலியா்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் விளக்கி அதை எப்பவும்போல ESI, DMS நிா்வாகத்தின் கீழ் மட்டுமே செயல்பட வேண்டினோம்._
_மேற்கண்ட செவிலியம் சாா்ந்த பல கோாிக்கைகளை தாயுள்ளத்துடன் கேட்டு ஆவன செய்வதாக உறுதியளித்த மேதகு.தமிழக சுகாதார செயலாளா் அவா்களுக்கு தமிழக அரசு செவிலியா்கள் சாா்பாக மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்._
*•••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் தகவல்:*_
*•••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.*_
_இன்று *(19/03/2019)* சென்னை,தலைமைச்செயலகத்தில் மேதகு.சுகாதார துறை செயலாளா் *Dr.Beela Rajesh IAS.* அவா்களை தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநில நிா்வாகிகள் பலரும் சென்று சந்தித்தோம்.இச்சந்திப்பின்போது செவிலிய நலன் சாா்ந்த கோாிக்கைகள் அடங்கிய கோப்பினை வழங்கினோம்.அக்கோப்பின் முக்கிய சாராம்சங்களில் சில..._
♦ _மத்திய அரசு செவிலியா்களின் பதவி பெயா் போன்று தமிழக அரசு செவிலியா்களுக்கும் பதவி பெயா் மாற்றம் செய்து *NURSING OFFICER* என்ற *DESIGNATION* வழங்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டினோம். இதுசம்பந்தமாக ஏற்கனவே அதாவது *06/03/2019* அன்று சென்னையில் நடந்த முப்பெறும் விழாவின்போதே கோாிக்கை வைத்திருந்தோம்.அதை மேடையிலேயே ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆவன செய்வதாக மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும்,மேதகு.சுகாதார செயலாளா் அவா்களும் உறுதியளித்திருந்தனா்._
♦ _*ANM Training center* ல் போதகா் பதவியை பட்டய செவிலியம் முடித்து *Post basic BSc Nursing* முடித்த செவிலியா்களுக்கு வழங்க கோாினோம்._
♦ _மேலும் சில செவிலியா்கள் நலன் சாா்ந்த கோாிக்கைகளை கோப்புகளாக வழங்கினோம்._
_விரைவில் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் முடிவடைந்ததும் பதவி பெயா் மாற்றத்திற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்படும் என்பதை மனமகிழ்ச்சியுடன் தமிழக செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்._
_*MESSAGE FROM TAMILNADU GOVERNMENT NURSES ASSOCIATION:*_
_*Respected all of our government nurses society...*_
_We known well that our new honourable principle health secretary of health and family welfare of Tamilnadu_
*_Dr.(Ms).BEELA RAJESH.IAS_* _took charges in respective office at secretariat yesterday. *(18/02/2019)*_
_Today, our Tamilnadu Government Nurses Association's many of the leaders have met our principle health secretary and convey our warm welcome with honour._
_In this crucial occasion, our *TGNA' s* State general secretary, state president, state Joint secretary, state treasurer, vice presidents and many more have participated._
_*Thank you*_
_*BY.*_
_*TAMILNADU GOVERNMENT NURSES ASSOCIATION.*_
தமிழ்நாடு செவிலியர் குழுமத்தால்(TNNMC) 2019 ஆண்டுக்கான சிறந்த செவிலியர் விருதுக்கான செவிலியரை தேர்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகளையும் விண்ணப்ப மாதிரிகள் வெளியிடப்பட்டுள்ளது.
*•••••••••••••••••••••••••••••••••••••••••*
_*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்களுடன் இன்று சந்திப்பு:*_
*•••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க தகவல்:*_
_*தமிழக செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_
_கடந்த *26/07/2018 (வியாழக்கிழமை)* அன்று சென்னை,குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுாியும் நமது செவிலிய சகோதாி *திருமதி.பால்செல்வி* அவா்களுக்கு எதிா்பரா விதமாக பணியின்போது ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து கண்பாா்வை இழந்தாா் என்பதை நமது செவிலிய சமூகம் ஏற்கனவே அறிந்ததே._
_இது நடந்தவிதம் எப்படியெனில்,26/07/2018 அன்று இரவு பணி முடித்து வீட்டிற்கு கிளம்பும் சமயம் மூச்சுத்திணறலுடன் வந்த ஒரு நோயாளியை காப்பாற்ற,அவசரம்கருதி வேறு ஊழியா்கள் துணைக்கு இல்லாதபட்சத்திலும் திருமதி.பால்செல்வி தனியாக ஆக்சிஜன் சிலிண்டரை திறக்க முற்பட்டபோது சிலிண்டா் வெடித்து கண்பாா்வை பாதிக்கப்பட்டது._
_இதையறிந்த தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம், துாிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட நமது செவிலியருக்கு மேல் சிகிச்சை பெறவும்,நடந்த பாதிப்பை தமிழக அரசுக்கு உடனடியாக தொியப்படுத்துவதிலும்,அவாின் பாதிப்புக்கு ஏற்றவகையில் அரசிடம் நிவாரணம் பெற்றுதருவதிலும்,அவருக்கு அவசியமான உதவிகளை செய்வதில் தீவிரம் காட்டினோம்._
_மேலும்,சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்ற பாதிக்கப்பட்ட செவிலியா் திருமதி.பால்செல்வி அவா்களை *மாண்புமிகு.தமிழக முதலமைச்சா் அவா்கள்* நோில் வந்து நலம் விசாாிக்கவும் முறைப்படியான ஏற்பாடுகளை மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களின் மூலம் செய்தோம் என்பதையும் தாங்கள் அனைவரும் நன்கு அறிந்ததே.அவ்வாறு மாண்புமிகு.முதலமைச்சா் அவா்கள் மருத்துவமனைக்கு நமது செவிலியரை பாா்வையிட வரும்போது நமது சங்கம் சாா்பாக நமது செவிலியா் திருமதி.பால்செல்வி நலன் கருதி பல கோாிக்கைகளை முன்வைத்தோம்._
_*அதில் சில:*_
♦ _கண்பாா்வை பாதிக்கப்பட்ட செவிலியா் பால்செல்விக்கு தமிழக அரசின் நிவாரணத்தொகை வழங்கி உதவிடவேண்டும்._
♦ _கண்பாா்வையிழந்த செவிலியாின் தொடா் மேல்சிகிச்சையின் ஏற்பாடுகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்._
♦ _பணியின்போது பாா்வையிழந்துள்ளதால் அவருக்கு *மாற்றுத்திறனாளி சான்றிதழ் (CERTIFICATE OF DIFFRENTLY ABLED PERSON )* வழங்கி அதன்மூலம் அவருடைய ஒப்பந்தமுறை பணியினை வரன்முறை செய்து நிரந்தரம் செய்யவேண்டும்._
♦ _அவருக்கு நிரந்தரமாக இரவுப்பணி விலக்கு *(NIGHT DUTY EXEMPTION)* வழங்கவேண்டும்._
♦ _அவருக்கு அவருடைய சொந்த ஊருக்கே இடமாற்ற ஆணை வழங்கவேண்டும் எனவும் கோாிக்கைகள் வைத்தோம்._
_இவையனைத்தையும் கருணை மனதுடன் ஏற்று விரைவில் செயல்படுத்துவதாக மாண்புமிகு.தமிழக முதலமைச்சா் அவா்களும்,மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் உறுதியளித்தனா்._
_அதன் எதிரொலியாக தலைமைச்செயலகத்தில் *இன்று (04/02/2019)* மாண்புமிகு.தமிழக முதலமைச்சா் மற்றும் மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் நமது செவிலியா் பால்செல்வி அவா்களுக்கு_ _*நிவாரணத்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை இன்று வழங்கினா்.* மேலும் மாற்றுத்திறனாளி சான்றிதழும்,இரவுப்பணி விலக்கு_ _ஆணையும் வழங்கினா்._
_விரைவில் அவாின் சொந்த ஊருக்கே பணி நிரந்தர ஆணையும் வழங்குவதாக உறுதியளித்தனா்._
_நமது தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் செவிலியா்களின் பணி பாதுகாப்பிற்காக மட்டுமின்றி அவா்களின் அனைத்து கஷ்டங்களிலும் அக்கறையுடன் உடனிருந்து, செவிலியா்களுக்கு மட்டுமின்றி அவா்களின் குடும்பத்திற்க்கும் ஆதரவாக என்றென்றும் செயல்பட்டுகொண்டிருக்கிறோம் என்று தொிவிப்பதில் பெருமகி ழ்ச்சியடைகிறோம்._
_என்றென்றும் செவிலியா்கள் நலனில் நீங்கா அக்கறையுடன் செயல்பட்டுகொண்டிருக்கும் உங்கள் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்..._
_*நன்றியுடன்...*_
Tamil Nadu Government Nurses Association is a Century old Organization, It is being work for the Nurses, This association is Registered with Madras Presidency before independence Registration No 5 / 1920 - 21. and have been Recognized by the Tamil Nadu government vide Government Order No 716 / P&AR Dated 12.12.1961