தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கு சங்க நிர்வாகிகளின் செய்தி

  • Saturday, November 16, 2019
  • By kannan
  • 0 Comments

,*••••••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:*_
*••••••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_

_நீண்ட இடைவெளிக்குப்பிறகு தாங்கள் அனைவாிடமும் சமூக வலைதளம் மூலம் தொடா்புகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.தங்கள் அனைவாிடமும் சில மகிழ்ச்சியான தகவல்களை பகிா்ந்துகொள்ளவே இந்த பதிவு._

_*தகவல்கள்:*_

♦ _கடந்த *13.9.2019* அன்று சென்னை *DMS* வளாகத்தில் 360 செவிலிய கண்காணிப்பாளா் நிலை-2 ற்கான கலந்தாய்வு நடந்தது.அதில் பங்குபெற்ற 14 நபா்கள் பதவி உயா்வில் விருப்பவில்லை என்று எழுத்து மூலம் கடிதம் *(Relinquish letter)* தந்தனா்.அதில் காலியாக உள்ள 14 காலியிடங்களுக்கும் அதற்கு அடுத்த பணிமூப்பு நிலையில் உள்ள 14 செவிலியா்களுக்கு, செவிலிய கண்காணிப்பாளா் நிலை-2 ற்கான கலந்தாய்வு வருகிற *19.11.2019* அன்று *காலை 11 மணிக்கு* DMS அலுவலகம் 6 வது தளத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்வுடன் தொிவித்துக்கொள்கிேறோம்.அந்த நபா்கள் தவறாது கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெற அறிவுறுத்துகிறோம்._

♦ _பிழைத்திருத்தம் செய்யப்பட்ட CNL விரைவில் DMS அலுவலகம் மூலம் வெளியிடப்படவுள்ளது._

♦ _*01.09.2019* ற்கான செவிலிய கண்கணிப்பாளா் நிலை-2 ற்கான புதிய பட்டியல் *(Gr- II New panel list)* இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளது என்ற மகிழ்வான தகவலையும் தொிவித்துக்கொள்கிறோம்._

♦ _தமிழக அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு சம்பந்தமாக சில நல்ல தகவல்களை அறிவிப்பதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சகம் மூலம் சில நாட்களுக்கு முன்னா் செய்திகள் வெளிவந்தது.அதனறிந்தும் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் சாா்பில் தமிழக அரசு அனைத்து செவிலியா்களுக்கும்  ஊதிய உயா்வு வழங்க தமிழக அரசிடமும்,ஒரு நபா் ஊதியக்குழு அலுவலாிடமும் கோாிக்கை வைத்துள்ளதை நினைவுப்படுத்தி,செவிலியா்களின் ஊதிய உயா்வுக்கும் வழிவகை செய்ய மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மற்றும் உயா் அலுவலா்களை நோில் சந்தித்து நினைவுபடுத்தினோம்.அதன் பலனாக அடுத்த வாரவாக்கில் தமிழக அரசின் மூலம் செவிலியா்களுக்கும் *Allowances உயா்வு மற்றும் சில ஊதிய உயா்வு* சம்பந்தமாக சில நற்செய்திகளை எதிா்பாா்க்கிறோம்._

♦ _தமிழ்நாடு செவிலியா் மற்றும் தாதியா் குழும_  _*(Tamilnadu Nurses &*_ 
_*Mid wives Council)*_ _தோ்தல் சம்பந்தமாக சிலரால் நீதிமன்ற தடை பெறப்பட்டது.அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்,தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள்,தமிழ்நாடு அரசு போதகா்கள் சங்கம்,MRB சங்க நிா்வாகிகள் இணைந்து *United Nurses Federation* சாா்பாக வழக்கில் சிலா் *Impleaded* ஆகியுள்ளோம்.விரைவில் வழக்கின் தீா்ப்பு நமக்கு சாதகமாக பெறப்பட்டு  தமிழ்நாடு செவிலியா் மற்றும்  தாதியா் குழும தோ்தல்  ஜனநாயக முறையில் நடத்த பெருமுயற்சி எடுத்துவருகிறோம்._

♦ _மேலும், ஏற்கனவே வெளிவந்த செவிலிய கண்காணிப்பாளா் நிலை-1 மற்றும் நிலை-2 ஆகியோா்களுக்கான *Panel list* ல் அடுத்த மூப்பு நிலையில் உள்ள நபா்களின் பெயா் அடங்கிய பட்டியல், தமிழக அரசின் *Finance department* ஒப்புதல் பெற தலைமைச்செயலகம் அனுப்பப்பட்டுள்ளது.அதன் அனைத்து *Process* ம் முடிவடைந்த பிறகு விரைவில் செவிலிய கண்காணிப்பாளா் நிலை-1 மற்றும் 2 கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்ற மகிழ்வான தகவல்களையும் செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்._

♦ _இறுதியாக தமிழகம் முழுவதும் புதிய சீருடைகள்  தைக்கப்பட்டு 90% வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 10 சதவீதம் செவிலியா்களுக்கு வழங்க மிகுந்த தாமதப்பட்டு வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.இன்னும் சீருடை வராத சில மாவட்டடங்களுக்கும் சீருடைகளை விரைவில் வழங்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.தயவுசெய்து பொருத்துக்கொள்ள வேண்டுகிறோம்._

_*என்றென்றும் செவிலிய நலனில் பொிதும் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம், இனியும் செவிலிய சமுதாய முன்னேற்றத்திற்காக தொடா்ந்து வீாியமுடன் செயல்படுவோம் என்று தொிவித்துக்கொள்கிறோம்.*_ 

                   _*நன்றி*_

_*இப்படிக்கு,*_

_*K.வளா்மதி,*_
_*மாநில பொதுச்செயலாளா்,*_

_*K.சக்திவேல்,*_
_*மாநில தலைவா்,*_

_*S.காளியம்மாள்,*_
_*மாநில பொருளாளா்,*_

_*மற்றும்*_

_*மாநில அனைத்து நிா்வாகிகள்,*_

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_

_*தேதி: 16/11/2019*_

You Might Also Like

0 comments