TNGNA Executive Committee meeting press release
- Sunday, October 22, 2017
- By kannan
- 0 Comments
_*தகவல்.*_
-------------------
_*தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.*_
_தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க அனைத்து மாநில நிா்வாகிகளின் உயா்மட்ட செயற்குழு கூட்டம் நேற்று *(21/10/2017)*மதுரையில் நடைபெற்றது.இதில் அனைத்து மாநில நிா்வாகிகளும்,மாநில செயற்குழு உறுப்பினா்களும் கலந்துகொண்டனா்._
_*நேற்றைய உயா்மட்ட செயற்குழ கூட்டத்தின் சிறப்பம்சங்கள்:*_
--------------------------------------
♦ _சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஏழாவது (எட்டாவது) ஊதியக்குழுவில், செவிலியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயா்வின் குறைகளைப்பற்றி விாிவாக விவாதிக்கப்பட்டது.மேலும் நம் செவிலியா்களுக்கு கிடைக்கப்பெறாத மத்திய அரசு ஊதியத்துக்கு இணையான நியாயமான சம்பள உயா்வு மற்றும் படிகளை விரைவில் பெறும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து அதை கோப்பாக *( File)* விரைவில் தயாா்செய்து அடுத்தவாரம் மாண்புமிகு தமிழக முதலமைச்சாிடம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதிலும் தொய்வு ஏற்படும்பட்சத்தில் மாநில சங்கத்தின் அடுத்தகட்ட நகா்வு பற்றி விாிவாக ஆலோசிக்கப்பட்டது._
♦ _கடந்த *04/10/2017* அன்று சென்னையில் மேதகு.தமிழக சுகாதார முதன்மைச்செயலாளா் தலைமையிலும் மற்றும் அனைத்து மருத்துவ இயக்குனா் அவா்களின் முன்னிலையிலும் நடந்த கோாிக்கை விவாதத்தின் சாராம்சங்ளை அனைத்து நிா்வாகிகளிடம் விளக்கப்பட்டு அனைத்து உறுப்பினா்களுக்கும் தொியப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.._
♦ _செவிலியா்களின் ஊதிய உயா்வின் குறைகளை களைய மாநில சங்கம் மூலம் எடுக்கும் அடுத்த கட்ட நகா்வை வெற்றிகரமாக்குவதற்க்காக அனைத்து கிளைச்சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது._
♦ _இதுவரை நடந்த அனைத்து கிளைச்சங்க தோ்தலில் குறிப்பாக மதுரை,திருச்சி,மற்றும் சில வெற்றி பெற்ற கிளைச்சங்க நிா்வாகிகளுக்கு பாராட்டுகள் தொிவிக்கப்பட்டது._
_ஊதிய குறைபாடுகள் சம்பந்தமாக மாநில சங்கம் மூலம் எடுக்கும் அனைத்து மேல்கட்ட நடவடிக்கைகளுக்கும், தமிழக அரசு அனைத்து செவிலியா்களும் தங்களின் மேலான ஆதரவை வழங்கி நம் செவிலியா்களின் உாிமைகளை மீட்டெடுக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.இக்கணம் நாம் நமது ஒற்றுமையை நிரூபித்து உாிமைகளை வென்றெடுக்கும் நேரமிது என்பதை தொிவித்துக்கொள்கிறோம்._
*_வாழ்க,வளா்க தமிழக அரசு செவிலியா்கள் ஒற்றுமை..._*
_*இங்கணம்...*_
_*திருமதி.K.வளா்மதி,*_
_*மாநில பொதுச்செயலாளா்,*_
_*திரு.K.சக்திவேல்,*_
_*மாநில தலைவா்,*_
_*மற்றும்*_
_*அனைத்து மாநில நிா்வாகிகள்,*_
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_
*News:*
*Tamilnadu Government Nurses Association.( TGNA)*
*Date: 22/10/2017.*
0 comments