TNGNA office bearers meeting with Hon'ble Chief minister's Secretary

  • Wednesday, October 25, 2017
  • By kannan
  • 0 Comments

_*தகவல்*_
--------------
_*தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்...*_

_இன்று *( 25/10/2017)* தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மாநில நிா்வாகிகள் சாா்பில் தமிழ்நாடு அரசு *முதலமைச்சா் மாண்புமிகு.எடப்பாடி K. பழனிச்சாமி* அவா்களை அவரது அரசு இல்ல அலுவலகத்தில் சந்திக்க மாலை 6 மணிக்கு முன் அனுமதி வாங்கி அவரது இல்லத்திற்க்கு *மாநில பொதுச்செயலாளா் திருமதி.K.வளா்மதி* அவா்கள் தலைமையில் 8 போ் கொண்ட குழு சென்றோம்._

_அவரது இல்லத்துக்குள் சென்று அவரை சந்திக்க காத்திருப்பு அறையில் காத்திருந்த நேரம் உளவுத்துறை முன்னெச்சாிக்கை அறிக்கை காரணமாக தமிழ்நாடு அரசு ஊழியா்களின் மாநில சங்க உறுப்பினா்கள் யாராக இருந்தாலும் சந்திப்பு தவிா்ப்பு என்ற பொதுவான அறிவிப்பின் காரணமாக நமக்கு ஒதுக்கப்பட்ட மாலை 6 மணி என்ற சந்திப்பு மாண்புமிகு.தமிழக முதலமைச்சா் அவா்களால் நிராகாிக்கப்பட்டது._

_இருப்பினும்,மாண்புமிகு முதலமைச்சாின் தனி உதவியாளா் *திருமிகு.காா்த்திகேயன் அவா்கள்,*முதலமைச்சாின் அறிவுறுத்தலின் போில் நமது சங்க மாநில பொதுச்செயலாளா் அவா்களை சந்தித்து அரசின் கொள்கை முடிவை விளக்கி,நமது கோாிக்கைகள் அடங்கிய கோப்பை பெற்று ஆவண செய்வதாக உறுதியளித்தாா்._

_அக்கோப்பை மாண்புமிகு.தமிழக முதலமைச்சாின் தனி அதிகாாி( Joint secretary) *திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன் IAS* அவா்களிடம் வழங்கி உடனடி ஆவண செய்யும்படி உத்தரவிட்டாா்கள்._

 _நமது மாநில பொதுச்செயலாளா் அவா்கள் அதோடு நிற்காமல் தமிழக முதல்வாின் தனி அதிகாாி (Joint Secretary) *திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன்* அவா்களை முதலமைச்சாின் இல்லத்திலேயே நோில் சந்தித்து தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவில் அரசு செவிலியா்களுக்கு உள்ள ஊதிய உயா்வு,பதவி உயா்வு மற்றும் சில குறைபாடுகளை களையவும்,தமிழக அரசு செவிலியா்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான சம்பள உயா்வு மற்றும் பதவி உயா்வுகளை வழங்கிடுமாறும் வேண்டினாா்._

_அதற்கு மாண்புமிகு தமிழக முதல்வாின் தனி அதிகாாி அவா்கள் நமது வேண்டுகோளை ஏற்று ஆவண செய்வதாக உறுதியளித்தாா்.மேலும் நம் கோாிக்கைகள் அடங்கிய கோப்பை *P & R department* ற்க்கு உடனடியாக  forward செய்து, நாளை தலைமைச்செயலகத்தில் *P & R department* ஐ உடனடியாக தொடா்புகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளாா்._

_அவாின் மேலான அறிவுறுத்தலின்படி நாளை *(26/10/2017)* நமது சங்கம் சாா்பாக P & R department ஐ சந்திக்க உள்ளோம் என்பதை தமிழக அரசு செவிலியா்களுக்கு அன்புடன் தொிவித்துகொள்கிறோம்._

_மேலும்,அடுத்த மாதம் முதல்வாரத்தில்,நமது சங்கம் சாா்பாக மாண்புமிகு.தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டுதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது._

_*இப்படிக்கு...*_

*_திருமதி.K.வளா்மதி,_*
_*மாநில பொதுச்செயலாளா்,*_

_*திரு.K.சக்திவேல்,*_
_*மாநில தலைவா்,*_

_*மற்றும்*_

_*அனைத்து மாநில நிா்வாகிகள்,*_

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_

You Might Also Like

0 comments