TNGNA Press Release Regarding 7 the Pay Commission(15/10/2017)

*தகவல்*

*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*

_அன்புடையீர்!_

_அனைவருக்கும் வணக்கம்.. கடந்த இரண்டு வருடங்களாக பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற ஆணையம் மூலம் புதிய சங்க நிர்வாகிகள் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டோம்_

_இதற்காக தேர்தல் ஆணையருக்கு பழைய சங்க நிர்வாகிகளால் 1.25 லட்சம் கொடுக்கப்பட்டு மற்றும் தற்போது 2,61,539 லட்சம் பணமும் கொடுக்கப்படவேண்டும் .._

_பழைய நிர்வாகிகள் பண பரிவர்த்தனைகளை இன்றளவும் முறையாக ஒப்படைக்காததால் நாங்கள் பதவியேற்ற பின் பிடித்த சந்தா தொகையின் மூலம் பகுதி கட்டிவிட்டு தவனை கோரியுள்ளோம்  தேர்தல் ஆணையர் டோலியாவிடம் .._

_மேலும் செவிலியர் புவனேஸ்வரி அம்மையார்  தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார் .. இவ்வாறு செவிலியர்களின் வியர்வையில் வசூலிக்கும் பணமெல்லாம் செவிலியர் நலனுக்காக பயன்படாமல் சிலரது சொந்த விருப்பு வெருப்புகளுக்காக வக்கீலுக்காகவே செலவழிக்கப் படுகிறது என செவிலிய சொந்தங்களுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம் ._

_இந்த நடவடிக்கைகளோடு நமது செவிலியர்கள் பிரச்சினை மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம்_

_இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் செயலாளர், பொருளாளர் மற்றும் ஏனைய மாநில நிர்வாகிகள் இணைந்து            புதிய செவிலிய கண்காணிப்பாளர் , செவிலியர் பணியிடம் மற்றும் ஏழரை ஆண்டுகளாக காலமுறை ஊதியம் பெறமுடியாமல் தவிக்கும் 400 செவிலியர்களை விரைவில் காலமுறை ஊதியம் பெற்றிட  கடுமையான முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றோம் .._

_இந்த செயல்பாடுகளை சரிவர செய்து செவிலியர்களுக்கு நல்லது நடந்துவிடக் கூடாது என எண்ணி, செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் சில புல்லுறுவிகள் செயல்பட்டு வருகின்றனர்._

_*இந்நிலையில் ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.. அதில் 1.1.16 முதல் செப்டம்பர் 2017 வரை பணப்பயன் இல்லை என்ற அறிக்கை ஒட்டுமொத்த செவிலியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது..இதை அரசின் கவனத்திற்கு சங்கம் எடுத்துச்செல்லும் மேலும் மத்திய அரசு செவிலியர்கள் போன்று சம்பளம் ,படிகள் பெற அரசிடம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்* .._

_*மேலும்  ஊதியக்குழு தொடர்பாக விரைவில் உயர்மட்ட செயற்குழு நடத்தி அரசிடம் முறையிடப்பட்டு செவிலியர்களின் உரிமையை நிலைநாட்ட எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து  சங்கம் தனது முழு முயற்சியையும் எடுத்து செயல்பட்டு சாத்தியமாக்கும் என தெரிவித்துக்கொள்கிறோம்.*_


_*இப்படிக்கு,*_

*_K.வளர்மதி,_*
*_மாநில பொதுச்செயலாளர்_*

*_S. காளியம்மாள்_*
*_மாநில பொருளாளர்_*

*_மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள்,_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்._*

You Might Also Like

0 comments