ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு அரசு நர்சுகள் சங்க ஆதரவு

*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*

*_தகவல்;_*

_அனைத்து செவிலிய சொந்தங்களுக்கும் வணக்கம்!!_

_இன்று நாம் அறிவித்த கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பட்டை அணிந்து பணி பாதிப்பில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் ஒற்றுமையுணர்வோடு அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்நுக்கொள்கிறோம்._

_*ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் விதமாக நாம் போராட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தினோம்.தற்போது தற்காலிகமாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை வாபஸ் வாங்கியதை தொடர்ந்து தற்காலிகமாக நமது போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.*_

_*வரும் காலங்களில் நமது செவிலியர்கள் தொடர்பான அனைத்து விடயங்களிலும் இதே ஒற்றுமையுணர்வுடன் நாம் ஒன்றிணைந்து வென்றிடுவோம்.*_

*_வாழ்க செவிலியம்!!!_*

*_வளர்க செவிலியர்கள் ஒற்றுமை!!!!_*

_இப்படிக்கு,_

*_K. வளர்மதி,_*
*_மாநில பொதுச்செயலாளர்,_*

*_K. சக்திவேல்,_*
*_மாநில தலைவர்,_*

*_S. காளியம்மாள்,_*
*_மாநில பொருளாளர்,_*

*_மற்றும் அனைத்து நிர்வாகிகள்,_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்._*

You Might Also Like

0 comments