செவிலியா் தின வாழ்த்து மடல்.2026

💐 சா்வதேச செவிலியர் தின வாழ்த்து மடல்  2026... 💐

உயிாின் வலியை உணரும் இதயம் — செவிலியா்…

உறவில்லா நேரத்திலும் உறவாக நிற்பவா் — செவிலியா்…

அழுகையின் நடுவிலும் நம்பிக்கை விதைப்பவா்…

அவசரத்தின் நொடிகளிலும் அமைதியை காப்பவா்…
வெள்ளை உடையில் நடக்கும் மனிதநேய தேவதைகள் நீங்கள்…

விழித்திருக்கும் கண்களில் ஆயிரம் உயிர்களின் நம்பிக்கை நீங்கள்…

ஊசி வைக்கும் கரங்கள் மட்டும் அல்ல…

உடைந்த மனங்களையும் ஆற்றும் அன்புக் கரங்கள் நீங்கள்…

பகல் இரவு பாராது பணியாற்றும் தியாகங்கள்…
பல குடும்பங்களின் பிரார்த்தனையாக மாறுகிறது…

கண்ணீரை மறைத்து புன்னகை தரும் உங்கள் சேவை…
காலம் கடந்தும் மதிக்கப்படும்…

செவிலிய சொந்தங்களே…
உங்கள் அா்ப்பணிப்பே இந்த சமூகத்தின் உயிா் மூச்சு…

🌍 சா்வதேச செவிலியா் தின நல்வாழ்த்துக்கள்!🌍

அன்புடன்...
K.இளங்கோவன்,
மாநில துணைத்தலைவா்,
TGNA

You Might Also Like

0 comments