Open Letter by The General Secretary Regarding the moron attack,

செயலாளரின் திறந்த மடல்



" செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"


சான்றோர் கேட்க வெறுப்பூட்டும் கடுஞ்சொற்களையும் பொறுத்தாற்றிக் கொள்ளும் ஆட்சியாளர்களின் நல்லாட்சியிலே வையக மக்கள் இனியாக வாழ்வர்.


செவிலிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். உங்கள் அன்பின் மிகுதியால் எங்கள் அணியை அபரிதமான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். நன்றி.


தமிழக அரசு செவிலியர்களின் உரிமைகளையும் பலத்தையும் மீட்டெடுப்பதே எங்கள் அணியின் தலையாய கடமை.


நேரில் சந்தித்து நன்றி சொல்ல இருந்த   வேளையில் பிரச்சினைகள் அதிகம் வந்து குவிகின்றது. 


குறிப்பாக  கடந்த 5.7.17 அன்று சென்னையில் நம் செவிலியர்.மகாலட்சுமியை  வக்கீல்  கடுமையாக தாக்கியது செவிலியர்கள் அனைவரின் உள்ளங்களை  கோபத்தில் ஆழ்த்தி உள்ளது


செய்தியை கேள்வி பட்ட நேரம் முதல் அதன் வேலையாகவே அலைந்து கொண்டு இருக்கிறேன்.


செவிலிய உணர்வு சற்று அதிகம் உள்ள தோழர்கள் உடனே ஏன் போராட்டம் செய்யவில்லை ? தங்களின் ஆதங்கங்களை நிமிடத்திற்கு நிமிடம் கொட்டி கொண்டு இருக்கிறார்கள்.


போராட நான் தயங்கவில்லை
அது பிரம்மாஸ்திரம்
அது தலையைதான் கொய்ய வேண்டும்.
தலைப்பாகையை தட்டி வந்து விட கூடாது.


போராட வலியுறுத்தும் அன்பர்களுக்கு உங்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்ன?
வக்கீலை கைது செய்ய வேண்டும் செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் .


போராட்டம் என்பது நாம் சொல்லும் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற போது செயல்பட வேண்டிய விசயம்.


உண்மையில் பெருமையாக இருக்கிறது. இந்த செய்தியை கேட்ட.
1.HEALTH MINISTER
2.HEALTH SECRETARY
3. DME
4. MMC DEAN
இது தங்களுக்கு நேர்ந்ததாகவே நினைக்கிறோம் என கூறி நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தனர்.


காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி அந்த வக்கீல் மீது கீழ்க்கண்ட பிரிவுகளில் FIR பதிவு செய்துள்ளனர்.
IPC
1.341....வழிமறித்து தடுத்தல்
2.294...தகாத வார்த்தைகள் பயன்படுத்துதல்
3.323....அடித்து காயபடுத்துதல்
4.506(2)..கொலை மிரட்டல்
5. SEC4..பெண் வன்கொடுமை
6. 353..அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல்.


FIR பதிவு செய்தால் காவல்துறை நடவடிக்கைகள் எடுத்தே தீரும்,
ஆனாலும் நான் அவரை கைது செய்ய வலியுறுத்தினேன்,
இன்று மாலைக்குள் கைது செய்து விடுகிறோம்
என உறுதி அளித்துள்ளனர்.


நீதியரசர் கிருபாகரனும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கிறேன் பெண்மணியை அடித்தது ஏற்று கொள்ள முடியாத விசயம் என்றார்.


பதவி உயர்வு பெற்று வாலாஜா செல்ல இருந்த செவிலியர் மகாலட்சுமிக்கு DME mmc யில் பணி மாற்றம் வழங்குகிறேன் என உறுதி அளித்துள்ளார்.



இன்று மாலைக்குள் கைது செய்ய
"ஒருவேளை தவறினால்  நம் எதிர்ப்பை காண்பிக்கும் விதமாக நாளை 10.7.17 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து செவிலியர்களும் கருப்பு பேட்ஜ்  அணிந்து பணி புரிய வேண்டுகிறேன்.


அடுத்தடுத்த நகர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


"MEN ARE STRONG AS LONG AS THEY REPRESENT STRONG IDEA"
மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி சிந்தனை முழுவதும் தீர்வு காணவே செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.


"உரிமைக்கு குரல் கொடுப்போம் "
உணர்ந்து செயல்படுவோம்"
மாறா அன்புடன்
க.வளர்மதி
மாநில செயலாளர்
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்

You Might Also Like

0 comments