மாண்புமிகு துணைமுதல்வருடன் சங்க நிர்வாகிகள் சந்திப்பு விவரம்(21/09/2017)
- Thursday, September 21, 2017
- By kannan
- 0 Comments
_மகிழ்ச்சியான தகவல்_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*
_அன்புடையீர்!_
_நேற்று 21.09.17 காலை முதல் நமது *மாண்புமிகு தமிழ்நாடு அரசு துணைமுதல்வர் ஐயா* அவர்களுடன்_ _சந்திக்கும் பொருட்டு நமது மாநில சங்க நிர்வாகிகள்_ _காத்திருந்தோம்_.
_இடையே சில மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாண்புமிகு துணை முதல்வர் ஐயா_ _அவர்களுக்கு மீட்டிங் இருந்ததால் நம்மை சந்திக்க காலதாமதம் ஏற்பட்டது.அதனால் இடையே மாண்புமிகு நமது துறைஅமைச்சரை சந்தித்து நமது கோரிக்கைகளை வழியுறித்தினோம் என்ற செய்தியை விரிவாக மாலையில் தங்கள் அனைவருக்கும் தெரியபடுத்தியிருந்தோம்_.
_காலதாமதம் ஏற்பட்டதால் நமது மாநில நிர்வாகிகளை_ *_மாண்புமிகு துணமுதல்வர் ஐயா_* _வீட்டில் சந்திக்க நேரம் ஒதுக்கி அதிகாரிகள் மூலம் எங்களுக்கு தெரியபடுத்தப்பட்டது_.
_நாங்கள் மாண்புமிகு துணைமுதல்வர் ஐயா வீட்டிற்கு சென்றபோது_, _எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் கூட்டம் அலைமோதிய போதிலும்_, _எங்களை அனைவரையும் அலுவலகத்தில் அழைத்து அமரவைத்து பேசும்போது மணி சரியாக 10 pm_.
_*நாம் குடுத்த கோரிக்கைகளை நிதானமாக வரி வரியாக படித்து*_ _*எங்களிடமும் சில கேள்விகளை*_ _*மாண்புமிகு துணை முதல்வர் ஐயா அவர்கள் வினவினார்*_..
_*எத்தனை வருடம் தாங்கள் படிக்கிறீர்கள்,3 1/2 வருடம் படித்தும் ஏன் டிப்ளோமா ஐ டிகிரியாக இன்னும் மாற்றவில்லை*_, _*ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒன்மேன் கமிசனில் உங்கள் சம்பள உயர்வு மற்றும் படிகளை ஏன் வாங்கவில்லை என்று வினவினார்*_..
_நாங்கள் தக்க சான்றுகளுடன் எடுத்துக்கூறியவுடன் மிகவும் கவனமாகவும் பறிவுடனும் கேட்டறிந்தபின்னர்_ . *_நமது கோரிக்கைகளுக்கான பைனான்ஸ் அப்ருவலுக்கு தாம் ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்_*.
_மேலும் எங்கள் முன்னிலையில் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு_ _செவிலியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் ,நாளை தாங்கள் சென்னையில் இருப்பீர்களா என்று வினாவினார்_,
_நமது துறை அமைச்சர் இங்கு தான் இருப்பேன் என்றதும் நாளை 22.09.17 காலை 11மணியளவில் நேரம் ஒதுக்குங்கள், நானும் வருகிறேன் செவிலியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசலாம் என கூறி ,எங்களிடமும் *நாளை 22.09.17 உங்கள் துறை அமைச்சர் முன்னிலையில் இன்னும் தெளிவாக பேசி உங்கள் குறைகளை கண்டிப்பாக நிவர்த்தி செய்கிறோம் என்று கனிவோடு கூறினார்கள் நமது மாண்புமிகு துணை முதல்வர் ஐயா அவர்கள்*_ _என மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்_.
_*இப்படிக்கு*_
*_K.வளர்மதி_*
*_மாநில பொதுச்செயலாளர்_*
*_S.காளியம்மாள்_*
*_மாநில பொருளாளர்_*
*_R.ஜீவாஸ்டாலின்_*
*_மாநில இணைச்செயலாளர்_*
*I.சந்திரா*
*_மாநில துணைத்தலைவர்_*
*_மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள்_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*
0 comments