மாண்புமிகு அமைச்சருடன் நிர்வாகிகள் சந்திப்பு(21/09/2017)

  • Thursday, September 21, 2017
  • By kannan
  • 0 Comments

*_முக்கிய அறிவிப்பு_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*
_அன்புடையீர்!_
    _இன்று 21.09.2017 நமது சங்க நிர்வாகிகள்_ *_மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை_* _சந்தித்தோம்_....
   _அப்போது நமது நீண்ட நாள் கோரிக்கைகளான, குறிப்பிட்ட மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில்_ *_தஞ்சை, கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மற்றும் திருச்சி_*  _இல்_ _பழைய நிலைக்கு ஏற்றாற்போல் மிகவும் குறைவான_ _செவிலியர்கள் இருப்பதையும் மேலும் அதிக பணிச்சுமையால் , மிகுந்த மன அழுத்தம் மற்றும் உடல்நிலை குறைபாடுகளுடன் பணியாற்றி வருகின்றனர் என தெளிவாக தக்க சான்றுகளுடன் விளக்கினோம்_.
       _மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனமாக கேட்டறிந்து_  _*செவிலியர்கள் பற்றாக்குறையை* கூடிய விரைவில் களைந்து *புதிய செவிலிய காலி பணியிடங்கள்* *தோற்றுவிக்கப்படும்* என உறுதி அளித்துள்ளார்_.
       _மேலும் பல செவிலிய கண்காணிப்பாளர்கள் பணிமூப்பு பெறும் நிலையில் உள்ளதால் விரைவில் *செவிலிய கண்காணிப்பாளர்*_ _*நிலை 1 கலந்தாய்வு நடத்த சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது*_, _அதற்கு அமைச்சர் அவர்கள் உடனடியாக ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்_.
      _ஆறாவது ஊதியக் குழு சமயத்தில் நமது பதவிஉயர்வு_ _செ.க.நிலை2 மற்றும் செ.க.நிலை3 யும் இணைத்ததையும்_ _அவ்வாறு இணைத்தபோது ஏற்படும் செவிலிய நிர்வாக_ _பற்றாக்குறையை போக்க 1200 புதிய செ.க.நிலை 2 பணியிடங்கள் தோற்றூவிக்கப்படும் என அரசு உறுதி_ _அளித்தும் இன்றளவும் நமக்கு கிடைக்க பெறாமல்_,
_குறைவான செவிலிய கண்காணிப்பாளர்களே இருப்பதால் *நிர்வாக சிரமமும் ,அனேக செவிலியர்கள் பதவி உயர்வே கிடைக்காமல் பணிமூப்பு*_ _*அடைவதையும் மேலும் பதவி உயர்வு பெற 28ஆண்டுகள் ஆவதையும் மேலும் தற்போது குறைந்த* *அளவே செ.க.நிலை- 2 பணியிடங்கள்  இருப்பதை சான்றுடன் தெளிவாக எடுத்துக் கூறினோம்*  .. அமைச்சர் கவனமாக கேட்டறிந்து *உடனடியாக புதிய*_ _*(400-500)* *செ.க.நிலை -2 பணியிடங்கள்* *தோற்றுவிக்கப்படும் என*_ _உறுதியளித்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்_
*_இப்படிக்கு_*
*_K. வளர்மதி_*
*_மாநில பொதுச்செயலாளர்_*
*_S.காளியம்மாள்_*
*_மாநில பொருளாளர்_*
_*R.ஜீவாஸ்டாலின்*_
*_மாநில இணைச்செயலாளர்_*
*_I.சந்திரா_*
*_மாநில துணைத்தலைவர்_*
*_மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள்_*,
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*.

You Might Also Like

0 comments