செவிலியர்களுக்கு சங்க தலைவரின் கடிதம்(15/09/2017)
- Friday, September 15, 2017
- By kannan
- 0 Comments
*பிறப்பிலான்* *சேவையாற்றும்* *எனதருமை செவிலிய* *பெருந்தகைகளுக்கு*
வணக்கம்.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் அனைவரும் 7 வது ஊதியக்குழு பரிந்துரையை நடைமுறைபடுத்த கோரியும், பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டியும் கடந்த இரண்டு வாரங்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் இந்த மாத இறுதியில் ஊதியக்குழுவின் அறிக்கைகளை பெற்ற பின்னர் நடைமுறைபடுத்த ஆவண செய்யபடும் என அண்மையில் பத்திரிகை செய்தி வெளிவந்துள்ளது.
இன்று (15.09.17) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இன்றுடன் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியும், வருகின்ற 21 ந்தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் அவர்களை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
ஒட்டுமொத்த செவிலியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 7 வது ஊதிய குழுவின் ஊதிய உயர்வை நடைமுறைபடுத்துதல் மற்றும் பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துதல் என்பதே, இவ்விரண்டு கோரிக்கைகளில் - நானும் மற்ற சங்க நிர்வாகிகளும் உங்களின் மனநிலைமை எதுவோ அதுவே எங்களின் மனநிலையும்.
தஞ்சையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மான நகலை அரசிடம் சமர்பித்தோம். அதை தொடர்ந்து உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்கு அரசு நமக்கு நேரம் ஓதுக்கீடு செய்து தரவுள்ளது. அவ்உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையானது உயர்திரு.மக்கள் மற்றும் குடும்ப நலவாழ்வுதுறை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் DMS, DME, DPH, ESI போன்ற இயக்குநர்கள் பங்குபெறுவர்.
அநேகமாக அடுத்த வாரம் இருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.
தேதியை அதிகாரபூர்வமாக அரசிடம் இருந்து பெற்ற பின்னர் செவிலியர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படும்.
அநேகமாக அடுத்த வாரம் இருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.
தேதியை அதிகாரபூர்வமாக அரசிடம் இருந்து பெற்ற பின்னர் செவிலியர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படும்.
நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசிடம் நடைபெறவுள்ள முதல் கூட்டமாகும்.
அக்கூட்டத்தில் *ஊதிய உயர்வு*, *பதவி உயர்வு*, *சீருடை மாற்றம்*, *புதிய* *பணியிடங்களைதோற்றுவித்தல்* *செவிலியர்களின் பணிகளை* *வரைமுறை படுத்துதல்*, *ஒப்பந்த செவிலியர்களின் ஊதிய உயர்வு*, *பணிநிரந்தரம்* உள்ளிட்ட அத்தியாவசிய கோரிக்கைகளை சமர்பித்து, அரசிடம் அதை நடைமுறைபடுத்த வலியுறுத்த உள்ளோம்.
மற்ற சங்கங்களின் போராட்ட அணுகுமுறைகள், நீதிமன்ற நடைமுறைகள், அரசின் அணுகுமுறை என ஒவ்வொன்றையும் கவனித்து கொண்டு வருகின்றேன்.
செவிலியர் நலன் சார்ந்த கோரிக்கைகளில் எனது தலைமையில் நடைபெறும் சங்கம் ஒருபோதும் புறந்தள்ளாது என தங்களிடத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் அரசால் அங்கீகாரிக்கபட்ட பல்வேறு சங்கங்கள் உள்ள நிலையில் ஒரு சில சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்குபெறவில்லை அரசின் வாக்குறுதியை ஏற்று, என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியபடுத்த கடுமைபட்டுள்ளேன்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது ஒற்றுமையுணர்வு.
நம் சங்கம் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பில் கட்டமைக்கபட்டுள்ளது.
இதன் கோரிக்கைகளை வென்றெடுப்பதில் ஒவ்வொரு செவிலியர்க்கும் ஒருவித கருத்துகள் மற்றும் நிலைப்பாடு இருக்கும்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் கருத்து மோதல்கள் நமக்குள் வரவேண்டாம்.
செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் மீது வைக்கபடும் விமர்சனங்களை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.
ஆனால் வார்த்தைகளில் தடித்தோ, அல்லது தனிமனித விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆலோசனைகளை எங்களிடத்தில் இடித்து கூறுங்கள், அடித்து கூறாதீர்கள்.
ஏனேனில் நாம் அனைவரும் ஓர் செவிலிய குடும்பம்.
அரசிடம் நம் சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும், மாநில - மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தேவைபடும் சமயத்தில் நம் சங்கம் தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என தெரிவித்துகொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு
*திரு.K.சக்திவேல்*
*மாநில தலைவர்*
*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்*
*திரு.K.சக்திவேல்*
*மாநில தலைவர்*
*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்*
0 comments