*முக்கிய தகவல்*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*
_தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு_
_11.09.2017 அன்று நமது துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்தித்து , நமது 108 வது செயற்குழு & பொதுக்குழு தீர்மானம் மற்றும் நமது நீண்ட நாள் நிலுவை கோரிக்கைகள் சம்மந்தமாக பேசப்பட்டது._
_நமது அனைத்து கோரிக்கைகள் சம்மந்தமாக அனைத்து இயக்குனர்கள் மற்றும் நமது செவிலயசங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இந்த மாத இறுதிக்குள் நாள் கொடுப்பதாக நமது துறை செயலாளர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்_
_மேலும் ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு நாம் தார்மீக ஆதரவு அளித்துள்ளோம் என ஏற்கனவே நமது செவிலியர்களுக்கு தெரிவித்திருந்தோம்_.
_மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நமது செவிலியர்களுக்கு பெற்றுத்தர சங்கம் உறுதியாக இருக்கிறது எனவும் மேலும் உயர்நீதிமன்ற ஆணை மற்றும் மருத்துவ அவசர சேவையில் நாம் இருபப்தால் போராட்டத்தில் நாம் பங்கு பெறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்_.
_அனைத்து செவிலிய கண்காணிப்பாளர்களுக்கு_ .. _நமது செவிலியர்களுக்கு ஆங்காங்கே வாரவிடுப்பு தரப்படவில்லை என தகவல் வந்தது_ ... _நாம் போராட்டத்தில் பங்கு பெறாததால் நமது செவிலியர்களுக்கு வாரவிடுப்பு வழங்கிட எந்த தடையும் இல்லை என தெரிவித்துக்கொள்கிறோம்_
_நமது கோரிக்கைகளை எந்தவித விட்டுக் கொடுப்பு இல்லாமல் கூடிய விரைவில் அனைவரது ஒத்துழைப்புடன் வென்றெடுப்போம் என சங்கம் தெரிவித்துக்கொள்கிறது_.
*இப்படிக்கு*
_*K.வளர்மதி*,_
*_மாநில பொதுச்செயலாளர்_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_,*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_,*
*_மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள்_*.
0 comments