உயர்திரு சுகாதாரதுறை செயலர் மற்றும் இயக்குனர்களுடனான சந்திப்பு குறித்த சங்க தலைவரின் அறிக்கை
- Friday, October 06, 2017
- By kannan
- 0 Comments
*பிறப்பிலான் சேவையாற்றும் எனதருமை செவிலிய சொந்தங்களுக்கு*
அன்பான வணக்கங்கள் .
தற்போது நாடு முழுவதும் *டெங்கு காய்ச்சல்*தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நம் செவிலியர்கள் யாவரும் தங்களுடைய செவிலிய சேவையை செவ்வனே ஆற்றிவருகின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தற்போதைய அசாதாரண சூழலில்
நம்முடைய செவிலிய சொந்தங்கள் தங்களால் இயன்றளவிற்கு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளிடத்திலும், உறவினர்களிடத்திலும் இது குறித்த ஆரம்ப கட்ட நோய் தாக்க அறிகுறிகள், பரவுவதை தடுக்கும் முறைகள் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
------------------------------
இரு தினங்களுக்கு முன்னர் மரியாதைக்குரிய உயர்திரு.மக்கள் நலவாழ்வு துறை செயலர் தலைமையில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் பங்குபெற்று சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் மருத்துவதுறையின் உயர்திரு .இயக்குநர்கள் *DMS, ESI, DPH* *ADME*-
மற்றும் உயர் அலுவலர்கள் பங்குபெற்றனர்.
கீழ்கண்ட கோரிக்கைகள் .
1) *Online Transfer counseling*
- DMS இயக்குநரகத்தினால் பணிகள் துவக்கபட்டு நடைபெற்று வருகின்றது. விரைவில் நடைமுறைபடுத்த ஆவணசெய்யபடும்.
2) *சீருடை மாற்றம்*
- மத்திய அரசு மற்றும் தலைசிறந்த தனியார் மருத்துவமனைகளில் நடைமுறையில் உள்ள மாதிரிகள் பெறப்பட்டும் - சங்கத்தின் மாதிரியையும் பரிசீலித்து இறுதி முடிவு எட்டபடும்.
3) *பட்டய படிப்பை - பட்ட படிப்பாக தரம் உயர்த்துதல்*
- Dr.M.G.R university & Tamilnadu Nursing Council இடத்தில் கருத்துரு கேட்டு, நிர்வாக ரீதியாக நடைமுறைபடுத்த முயற்சி மேற்கொள்ளபடும்.
4) *STAFF NURSE - NURSING OFFICER*
பெயர்மாற்றம் செய்திட முயற்சி மேற்கொள்ளபடும்.
5) *செவிலியர் பற்றாக்குறை*-
INDIAN NURSING COUNCIL பரிந்துரைத்த விதிகளின் படி எண்ணிக்கை அளவில் செவிலியர்கள் பணியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
6 ) *ALLOWANCES. & TIME BOUND PROMOTION*
- ஊதிய குழு பரிந்துரைக்கு பின்னர் .
7) *NON-NURSING DUTIES*-
Data Entry operator உள்ளிட்ட என்னென்ன செவிலியர் அல்லாத பணிகள் வருகின்றதோ - அவையனைத்தும் சீராய்வு செய்வதற்கு ஓர் குழு அமைக்கபட்டு அதில் செவிலியர்களுக்கான பணிகளை வரன்முறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும்.
8) *Nurse's Quarters*-
செவிலிய விடுதிகள் எண்ணிக்கை அளவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கபடும்.
9)
*ஆண் செவிலியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு*
மகப்பேறு பயிற்சி முடித்த 134 அரசு பயிற்சி செவிலியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் பங்குபெற கட்டாயமாக முயற்சிகள் மேற்கொள்ளபடும்.
10)
*உச்ச நீதிமன்ற வழிகாட்டல்* படி
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக *Rs.20,000* வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
11) *செவிலியர்களுக்கான துறை ரீதியிலான விசாரணை குழுவில் ஓர் மூத்த செவிலியரும்* இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுகொள்ளபட்டுள்ளது.
இது தொடக்கபுள்ளி தான். அனைவரும் நாம் ஒன்றினைந்து செயல்படுவோம்.
*மாநில தலைவர் என்ற முறையில் நான் முழுவதுமாக நம் செவிலிய சொந்தங்களை மட்டுமே நம்பி இப்பதவியில் தொடர்ந்து வருகின்றேன்* என இந்த தருணத்தில் தெரிவித்து கொள்ள கடமை பட்டுள்ளேன்.
வாழ்க செவிலியர் ஒற்றுமை !
வளர்க செவிலிய சங்கம் !!
இப்படிக்கு
*K.சக்திவேல்*
*மாநில தலைவர்*
& *அனைத்து மாநில நிர்வாகிகள்*
*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்*
0 comments