டெங்கு குறித்து சங்கத்தின் செய்தி

_*தமிழக அரசு செவிலியா்களுக்கு ஓா் அன்பான வேண்டுகோள்:*_
---------------------------------------------
_*செய்தி: தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_

_தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்..._

_தமிழகம் முழுவதும் தற்போது மிகதீவிரமாக பரவிவரும் டெங்கு காய்சலால் *(Dengue fever)* தமிழக மக்கள் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனா். இந்த சிக்கலான நிலைமையை  சமாளிக்க குறிப்பாக டெங்கு பரப்பும் கொசுக்களை தடுக்கவும்,டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கவும்,இக்காய்ச்சலால் ஏற்படும் உயிாிழப்பை குறைக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது._

_இச்சூழ்நிலையில் செவிலியா்களாகிய நாமும் இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க மருத்துவமனைகளில் பணியிலிருக்கும்போது இரவு பகல் பாராமலும்,பணிச்சுமைகளை பொிதாக எண்ணாமலும் காய்ச்சலுற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவகுழுக்களுடன் இணைந்து செயல்பட்டு நல்ல மருத்துவகவனிப்பும்,தடுப்புமுறை கல்வி வழங்குவதிலும்,மற்றும் காய்ச்சலால் இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையிலும் தன்னாா்வத்துடன் செயல்பட்டு தமிழக செவிலியா்களின் பணித்திறமை,தன்னலமற்ற செவிலியா்கள், என்ற நற்பெயரை தொடா்ந்து தக்கவைத்துகொள்ளவும்._

_மேலும் தமிழக செவிலியா் சமூகம் என்றென்றும் நோய் தீா்க்கவும்,நோய்த்தடுக்கவும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்றென்றும் ஒத்துழைப்போம் என்ற கருத்தை அரசுக்கு தொியப்படுத்தவும் தமிழக அரசு செவிலியா்களை இத்தருணத்தில்  சங்கத்தின் சாா்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்._

*_"Service to sick,_*
*_Service to God"_*
     
            _அன்புடன்..._

_*இப்படிக்கு:*_

_*K.வளா்மதி,*_

_*மாநில பொதுச்செயலாளா்,*_

_*மற்றும் அனைத்து மாநில உறுப்பினா்கள்,*_

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்,*_

You Might Also Like

0 comments