உயர்திரு. சுகாதாரத்துறை செயலர், இயக்குனர்களுடனான சங்க நிர்வாகிகளின் சந்திப்பு விவரம்

  • Wednesday, October 04, 2017
  • By kannan
  • 0 Comments

*_தகவல்_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*
_*வணக்கம்!*_
    _*இன்று 4.10.17 உயர்திரு.சுகாதார செயலாளர் மற்றும் அனைத்து இயக்குனர்கள் (Dms ,Dme,Esi,DPH) உடன் நமது சங்க பிரதிநிதிகள் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்,பிரச்சனைகள் தொடர்பாக கலந்துகொண்டு பேசினோம்.*_
    _*நமது கோரிக்கைகள் அனைத்துக்கும் தக்க சான்றுடன் விளக்கினோம் . சுகாதார செயலர் மற்றும் அனைத்து இயக்குனர்கள் உன்னிப்பாக கவனித்து அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.*_
   _*மேலும் உடனடியாக நிவர்த்தி செய்வதாக சில கோரிக்கைகளை உறுதியளித்தார், அவை*_
_*1.ரெகுலர் சர்விசில் இணைந்து ஒருநாள் பணியாற்றினாலும் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்*_
_*2.செவிலியர் மீதான குற்றச்சாட்டு விசாரணை குழுவில் செவிலிய கண்காணிப்பாளர் அல்லது நிலைய மூத்த செவிலியர் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்*_
_*3.செவிலியர் பற்றாக்குறையை நீக்கிட அனைத்து இயக்குனர்களிடமும் புரோப்பசல் அனுப்பி புதிய செவிலிய பணியிடங்களை தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்*_
_*4.ஏழு வருடம் முடித்த நமது தொகுப்பூதிய செவிலியர்களை விரைவில் காலமுறை ஊதியம் பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்*_
_*5.செவிலியர் பணி செவிலியம் சாரா பணிகளை வரைமுறை படுத்த குழு அமைத்து ,அதில் செவிலிய பிரதிநிதிகள் இடம்பெற்று விரைவில் மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் .*_
_*6.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பாதுகாப்பிற்காக பாதுகாவலர்களை விரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்*_
_*7.DPH இல் பணிபுரியும் செவிலியர்களுக்கு 5 வாரவிடுமுறை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.*_
_*மேலும் இதர கோரிக்கைகளுக்கான நடவடிக்கை எடுக்க துறை இயக்குனர்களுக்கு நமது செயலாளர் அறிவுறித்தியுள்ளார்.*_
_*நமது சங்கத்திடமும் சில தகவல்களை பெற்றுத்தருமாறு கோரியுள்ளார் ,இதனை பின்பு தங்கள் அனைவருக்கும் தெரியபடுத்துவோம் என மகிழச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*_
  
_*இப்படிக்கு,*_
_*K. வளர்மதி,*_
_*மாநில பொதுச்செயலாளர்,*_
*_மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள்,_*
*_தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்_*

You Might Also Like

0 comments